kolisoda part 2 trailer release vijaysethupathy

கோலி சோடா

2014 ம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் கோலிசோடா.இந்த படத்தில் பசங்க படத்தில் நடித்த 4 சிறுவர்கள் நடித்திருந்தனர்.இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது.


புதுமுகங்கள்

இந்நிலையில் கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.இந்த படத்தையும் விஜய் மில்டனே இயக்குகிறார்.ஆனால் இந்த படத்தில் முதல் பாகத்தில் உள்ளவர்களை பயன்படுத்தாமல் புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளார் விஜய் மில்டன்.

கௌதம் வாசுதேவ் மேனன்

சமுத்திர கனி, செம்பண் ஜோஸ், பரத் சீனி, வினோத்,எசக்கி பரத்,சுபிக்ஷா,கிருஷ்ணா,ரக்ஷிதா,ரோஹிணி,ரேகா,சரவண சுப்பையா,ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இயக்கஜனர் கௌதக் வாசுதேவ் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

விஜய் சேதுபதி

மேலும் இப்படத்தை விஜய் மில்டனின் ரஃப் நோட் தயாரித்திருக்கிறது.
இதில் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தின் ட்ரெய்லரை இன்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.