விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'கொலைகாரன்' படம் ஏற்கனவே வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி மாறிக்கொண்டே போனது.

இந்நிலையில் ஜூன் 5 ஆம் தேதி, ரிலீஸ் ஆகும் என எதிரிபார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 7 ஆம் தேதி, ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லராக உருவாகியுள்ள 'கொலைகாரன்' படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷ்மிகா நடித்துள்ள இந்த படத்தில் ,  நாசர், சீதா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.