kohli anushka sharma wedding reception invitation
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி-நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் கடந்த 11ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது.
திருமணத்திற்கு கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் அழைக்கப்படவில்லை. கோலி மற்றும் அனுஷ்கார் சர்மா ஆகியோரின் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்திற்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரை மட்டுமே கோலி அழைத்திருந்தார்.
வரும் 21-ம் தேதி டெல்லியிலும் 26ம் தேதி மும்பையிலும் கோலி-அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு அழைப்பு விடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
திருமண வரவேற்பு அழைப்பிதழில் கோலியும் அனுஷ்கா சர்மாவும் புதுமை செய்துள்ளனர். மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு அழைப்பிதழின் கவரில் செடியையும் இணைத்துள்ளனர்.
கோலி சார்பில் முதல் அழைப்பிதழ், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கும் அனுஷ்கா சர்மா சார்பில் முதல் அழைப்பிதழ் ஷாருக்கானுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
