இந்த வருட தீபாவளி சரவெடியாக வெளிவர தயாராக இருக்கும் படம் கொடி, வெற்றிமாறன் மற்றும் மதன் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது நாம் அறிந்ததே....

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள தனுஷுக்கு ஜோடியாக, த்ரிஷாவும், அனுப்பமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர். அதே போல் முதல் முறையாக தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

இப்படத்தின் நாயகனான தனுஷும் இப்படத்தில் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார், மொத்தம் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது மீதம் உள்ள நான்கு பாடல்களை ' வாடி ராசாத்தி ', 'சூட் தி குருவி ' போன்ற வித்தியாசமான பாடல் வரிகளை கொடுத்த விவேக் எழுதியுள்ளார்.

வரும் தீபாவளிக்கு ஐந்து படங்கள் வெளிவருவதாக கூற படுகிறது, இந்த ரேஸில் கொடியும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் அரங்கத்தில் நடைபெற்றது, இதில் தனுஷ் , வெற்றிமாறன், இயக்குனர் டுரைசெந்தில் குமார் , அனுப்பமா, சந்தோஷ் நாராயணன் போன்ற பலர் கலந்து கொண்டனர்,

இதில் கலந்து கொண்ட தனுஷ் வேஷ்டி சட்டையோடு தீபாவளி தினத்தை நினைவு கூர்வது போலவே பிரதிபலித்தார், பின் பேசிய அவர் தன்னுடன் நடித்த சகா நடிகர்களு நன்றி தெருவித்தார்.

முக்கியமாக அவருக்கு தேசிய விருது வாங்கி தந்த வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்தார்.

அதே போல் தன்னை பாடல் எழுதி பாட வைத்த இசையமைப்பாளர், சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் தீபாவளியில் சந்திப்போம் என சிம்பிள்லாக தனது உரையை முடித்தார்.

தீபாவளி ரேஸ்யில் இணைத்துள்ள மற்ற நான்கு படங்களும் இது வரை எந்த ப்ரோமோஷான் நிகழ்ச்சிகளை தொடங்காத போது முதல் முறையாக தற்போது தனுஷின் கொடி பட ப்ரோமோஷான் வேளையில் தீவிரமாக இறங்க உள்ளதாம் தயாரிப்பு நிறுவனம்.

அதனால் தான் மிக விரைவிலேயே, இப்படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவினை சிம்பிள்ளாக நடத்தியுள்ளனர் என கிசுகிசுக்க படுகிறது