நடிகை குஷ்புவைத் தொடர்ந்து பாஜகவில் இணையும் திரை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடிகை குஷ்புவைத் தொடர்ந்து விஷால், சுகன்யா, விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் முற்றிலும் பொய் என மறுப்பு தெரிவித்தனர். 

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் வனிதாவை பாஜகவில் இணைப்பதில் அந்த கட்சிக்கு உடன்பாடு இல்லை என்பது போல் கூறப்பட்டது. ஆனால் வனிதாவை முந்திக்கொண்டு மற்றொரு பிக்பாஸ் பிரபலமான மோகன் வைத்யா கடந்த வாரம் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.  சேது, அந்நியன் போன்ற படங்ள்,  மர்ம தேசம், கோலங்கள், அலைகள் போன்ற பிரபல தொடர்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மோகன் வைத்யா. கர்நாடக இசைக்கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் மோகன் வைத்யா மாநில தலைவர் முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

 

இதையும் படிங்க: நம்ம கண்ணம்மாவா இது?... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...!

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளருக் கேஜேஆர் ஸ்டூடியோ நிறுவனத்தின் உரிமையாளருமான கோட்டபாடி ராஜேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தன்னை இன்று அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். தமிழில் அறம், ஐரா, குலேபகாவலி, தும்பா மற்றும் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.