பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான 'M.S. Dhoni: The Untold Story ', படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. தற்போது, தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படமான, 'அர்ஜுன் ரெட்டி படத்தின்' இந்தி ரீமேக்காக உருவாகும், 'கபீர் சிங்' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மகேஷ் பாபு, ராம்சரண் ஆகிய முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். அதே போல் ஹிந்தியில் நெட்ப்ளிக்சில் ஒளிபரப்பாகும் லஸ்ட் ஸ்டோரியில் சுய இன்ப காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். லிப் லாக் காட்சியில் நடிக்கவும் தாராளம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்கவும், இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் கியாரா அதவானியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.