kiruthika chowdry murder issue

மும்பையில், வசித்து வந்த பிரபல மாடலும், நடிகையுமான கிருத்திகா சவுதிரி கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட இறந்து கிடந்தார்.

ஏற்கனவே இது கொலை என தெளிவு படுத்திய போலீசார். கிருத்திகாவை கொலை செய்த கொலையாளி, இவர் உடலில் இருந்து துறுநாற்றம் வராமல் இருக்க ஒரு சில ட்ரிக்குகளை கையாண்டு உள்ளதை கண்டு பிடித்துள்ளனர்.

கிருத்திகாவை வலது பக்கம் மண்டையில் மிகவும் வேகமாக அடித்து கொலை செய்த கொலையாளி, அவர் ரத்தம் கொட்டிய இடமெல்லாம் சுத்தமாக துடைத்து விட்டு அங்கு வாசனை திரவியத்தை தெளித்துள்ளார். மேலும் இவரை மோப்ப நாய் வைத்து கண்டு பிடிக்காமல் இருக்க சுவற்றின் ஓரங்களில் மிளகாய் பொடியும் தூவியுள்ளார்.

அதே போல் நாற்றம் வீசுவதை தடுக்க ஏசியை மிகவும் அதிகமாக வைத்து விட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.