நடுவில் நடிப்புக்கு மட்டும் நல்லபேர் வாங்கித் தந்த ‘நடிகையர் திலகம்’ படத்தைத் தவிர்த்து, தொடர்ச்சியாக ஒரு டஜன் ஃபிளாப் படங்களில் நடித்து ‘இந்த சுவரு இன்னும் எத்தனை பேரை காவு வாங்கக் காத்திருக்கோ’ என்று வலைதள வல்லுநர்கள் கிண்டலடிக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் ‘சர்கார்’நாயகி என்று சொல்லப்படும் அப்படத்தின் ஜூனியர் ஆர்டிஸ்ட் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷின் கடைசி ஹிட் அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரஜினி முருகன்’. அதைத்தொடர்ந்து தனுஷுடன் அவர் நடித்த சூப்ப ஃப்ளாப் படமான ‘தொடரி’யில் துவங்கிய சோகம் இன்று ‘சர்கார்’ வரை நீளுகிறது. நடுவில் அவர் சாய்த்த ஹீரோக்கள் பட்டியல் லேசுப்பட்டதல்ல. ’ரெமோ’ பைரவா’ பாம்பு சட்டை’’தானா சேர்ந்த கூட்டம்’,’சீமராஜா’ சாமி2’, ‘சண்டக்கோழி2’ என்று சிவகார்த்திகேயன் துவங்கி சூர்யா,விக்ரம், விஷால் என்று வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இதையொட்டி ‘சர்காரும் இந்த கீர்த்தி செண்டிமெண்டில் சிக்குமா என்று விஜய் ரசிகர்கள் விசனப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சர்காரில்  ஒரு முக்கியத்துவமும் இல்லாமல், கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் போலவே விஜயின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை.