பிரபல நடிகை ஒருவர் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சாப்பிட்ட பின், பெற்ற குழந்தையை மறந்து உள்ளேயே விட்டு விட்டு, பின் சுதாரித்துக் கொண்டு குழந்தையை தூக்கி வரும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 

இந்த விடியோவை ஷார் செய்துள்ள ஒருவர், பொதுவாக மக்கள் ஓட்டலுக்கு சாப்பிட சென்றால்,  பர்ஸ், செல்போன், ஹேண்ட்பேக் உள்பட ஒருசில பொருட்களை மறந்துவிட்டு திரும்பி செல்வது வழக்கமான ஒன்று. ஆனால் அமெரிக்க நடிகை கிம் கர்தர்ஷியான், தனது குழந்தையை ஓட்டலில் மறந்துவிட்டு திரும்பி உள்ளார் என வீடியோவின் கீழ் விமர்சித்துள்ளார்.

அந்த ரசிகர் சொல்வதற்கு ஏற்ப, இந்த வீடியோவில் கிம்கர்தர்ஷியான் ஓட்டலில் இருந்து வெளியே வந்து தனது காரில் ஏற முயல்கிறார். பின் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவராக மீண்டும் ஓட்டலுக்குள் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது அவருடைய இடுப்பில் குழந்தை உள்ளது. எனவே அவர் குழந்தையை ஓட்டலில் மறந்துவிட்டு வந்தது உறுதியாகியுள்ளது.

ஆனால் இந்த வீடியோ குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'என்னுடைய குழந்தையை நான் மறந்து விடவில்லை. கார் சீட் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க தான் வெளியில் வந்தேன்' என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கும் ரசிகர்கள் பலர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.