kidayin karunai manu will release on june 2 nd

விதார்த் கதாநாயகனாக நடிக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஜூன் 2-ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் நாயகியாக ரவீனா ரவி நடித்துள்ளார்.

படத்தை சுரேஷ் சங்கய்யா இயக்கியுள்ளர்.

படத்திற்கு ஆர்.ரகுராம் இசையமைத்துள்ளார்.

படத்தை ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் காணாமல் போன தனது ஆட்டுக்குட்டியை தேடிச் செல்லும் ஒருவனின் கதை.

காணாமல் போன ஆடு இன்னொருவரால் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. கோவிலில் பலியாவதிலிருந்து ஆடு எப்படி காப்பாற்றப்படுகிறது என்கிற கதை.

படம் தயாராகி ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இதுவரை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருகளை பெற்றுள்ளது.

தணிக்கை குழுவிடம் மாட்டி பிறகு மறு தணிக்கை செய்யப்பட்டு படம் வெளிவந்தது.