Asianet News TamilAsianet News Tamil

Khushbu Sundar : உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா? தன்னை கேலி செய்தவருக்கு சரியான பதிலளித்த குஷ்பு!!

Khushbu Sundar : குஷ்புவின் ஸ்லிம் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்த சிலர் உங்களுக்கு உடல்நலம் சரியில்லையா மெலிந்து கொண்டே செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். 

Khushbu Sundar tweet with her slim photo
Author
Chennai, First Published Dec 5, 2021, 1:56 PM IST


தனது வசீகர தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 90's கனவு கன்னியான குஷ்புவிற்கு கோவில்  கட்டி கொண்டாடிய  ரசிகர் பட்டாளம் உண்டு. வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னிய குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார்.  இதற்கிடையே சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர், தீபாவளி வரவான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையே  தனது உடல் எடையில் கவனம் செலுத்தி மீண்டும் 90'S நாயகியாக உருமாறியுள்ள குஷ்பு, தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதும் அந்த போஸ்டிற்கு ரசிகர்கள் ஆக ஓகோ என்று பாராட்டுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

இது ஒருபுறம் இருந்தாலும் குஷ்புவின் மெலிந்த தோற்றத்தை பார்த்து சிலர் உங்களுக்கு உடல் நிலை சரியில்லையா என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இன்றைய, அன்றைய புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ள குஷ்பு; "அங்கிருந்து இங்கு. 20 கிலோ எடை குறைத்த, நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள், ஆரோக்கியமே செல்வம். என் உடம்பு சரியில்லையா என்று கேட்பவர்கள், உங்கள் அக்கறைக்கு நன்றி. இதற்கு முன்பு நான் அவ்வளவு ஃபிட்டாக இருந்ததில்லை. நான் உங்களில் 10 பேரையாவது உடல் எடையை குறைத்து, உடல் தகுதி பெற தூண்டினால், நான் வெற்றி பெற்றுள்ளேன் என்பது எனக்குத் தெரியும்."என பதிவிட்டுள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios