Khushbu beauty after see posted a old picture of hers on twitter

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செல்ஃபி எடுத்து ட்விட்டரில் போட்டு ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். இந்நிலையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஃப்ரீ ஹேரில் இருக்கும் போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். குஷ்புவின் இந்த அழகான போட்டோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து கமெண்ட்ஸ் போட்டு அசத்தி வருகின்றனர்.

நடிகை குஷ்பூவுக்கு ஏராளனமான தமிழ் ரசிகர்கள் உண்டு. ‘ சின்னத் தம்பி’ படத்துக்குப் பிறகு குஷ்புவின் ரசிகர்கள் குஷ்பூவின் அபிமானிகளாக மாறியதோடல்லாமல், சிலர் குஷ்பூவுக்கு கோவிலே கட்டினர். 

இந்நிலையில் சமீபத்தில் குஷ்பூ ட்விட்டரில் வெளியிட்டிருந்த அவரது 
பழைய ஃபோட்டோவைப் பார்த்து, சொக்கிப் போன சில ரசிகர்கள் ,’ திருமணமாகி பல ஆண்டுகள் ஆனபோதும், இன்னும் பழைய குஷ்பூ போன்றே அம்சமாக உள்ளீர்கள்’ என்றும், நீங்க என்றும் 16 மேடம் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

மற்றொரு ரசிகரோ நீங்க ஏன் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவில்லை பல பட்டங்களை வென்றிருப்பீர்களே என குஷ்பூவின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.