நாயகன் தற்போது தனது செல்ல மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ தான் சமூக வலைதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. 

சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டிய கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 விற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உண்டு. முன்னதாக இந்த படத்தின் முதல் பாகம் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி அப்போதே இரண்டாம் பாகத்திற்கான விதையை விட்டு சென்றிருந்தது பின்னர் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியாகியிருந்த கே ஜி எஃப் அத்தியாயம் 2 மிகப்பெரிய வெற்றிகளை கண்டது.

View post on Instagram

100 கோடி பட்ஜட்டில் உருவான இந்த படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீநிதி ஷெட்டியும் நடிப்பால் அசத்தியிருந்தார். நாயகன் கொல்லப்பட்ட போதிலும் மூன்றாம் பக்கத்திற்கான துணுக்குகளும் இறுதியில் விட்டு வைக்கப்பட்டிருந்தது. கதை சொல்லும் பாணியில் உருவாகி இருந்த இந்த படத்திற்கு பிரகாஷ்ராஜ் கதை சொல்லும் ரோலில் நடித்திருந்தார். தங்க சுரங்க கொள்ளையனை மாஸ் நாயகனாக மனதில் நிற்க வைத்தது கே.ஜி.எப்.

மேலும் செய்திகளுக்கு...திருமணத்தை மறைத்த செவ்வந்தி சீரியல் நடிகை..தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் பதிவு

View post on Instagram

முதல் பக்கத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக பல வருடங்கள் அதே கெட்டப்பில் இருந்த யாஷ், படம் வெளியாகி வெற்றியடைந்ததை அடுத்து முடி வெட்டிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதோடு இவரது மனைவி ராதிகா, குழந்தைகள் உடனான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இரண்டு கட்டங்கள் முடிவடைந்தது தொடர்ந்து மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என தெரிகிறது. இந்நிலையில் நாயகன் தற்போது தனது செல்ல மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ தான் சமூக வலைதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. 

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

View post on Instagram