நடிகர் அம்பரீஷ் - நடிகை சுமலதா ஜோடியின் மகன் திருமண விழாவில் நடிகர் யாஷும், நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரெபல் ஸ்டார் அம்பரீஷ் - நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக்கின் திருமணம், கடந்த வாரம் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த திருமண விழாவில் கன்னட நடிகர் யாஷும் கலந்துகொண்டார். இந்த விழாவில் நடிகர் யாஷ் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை ரம்யா கிருஷ்ணனும், யாஷுடன் இணைந்து கன்னட பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த வீடியோவுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... காஸ்ட்லி பைக்-ல வந்து செருப்ப திருடிட்டு போறாங்க... என்ன கொடுமை சார் இது - புலம்பிய மாஸ்டர் பட நடிகை

View post on Instagram

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கே.ஜி.எஃப் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கடந்தாண்டு வெளியான இப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்துக்கு பின்னர் நடிகர் யாஷ் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது.

சமீபத்திய தகவல்படி நடிகர் யாஷ், இராமாயணத்தை மையமாக வைத்து உருவாக உள்ள பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நிதிஷ் திவாரி இயக்கி உள்ள இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், சீதையாக ஆலியா பட்டும் நடிக்க உள்ள இப்படத்தில் யாஷ் ராவணனாக நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... இதென்ன பகல் கொள்ளையா இருக்கு... அனுமனுக்கு பக்கத்து சீட் ரேட் அதிகமா? ஆதிபுருஷ் படக்குழு விளக்கம்