ராக்கிங் ஸ்டாருக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு... சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளும் க்யூட் போட்டோ...!

ஒரே படத்தில் உலக புகழ் பெற்றவர் கன்னட நடிகர் யஷ். ராக்கிங் ஸ்டார் என கன்னட திரையுலகில் செல்லமாக அழைக்கப்படும் இவர், பல வெற்றி படங்களைக் கொடுத்திருந்தாலும். தமிழ் ரசிகர்களுக்கு இப்படி ஒரு மாஸ் ஹீரோவை அறிமுகம் செய்தது கே.ஜி.எப் திரைப்படம் தான். அதுமட்டுல்லாது கன்னட திரையுல வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையும் கே.ஜி.எப் திரைப்படத்திற்கு மட்டுமே கிடைத்தது. 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ், 2016ம் ஆண்டு ராதிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. அய்ராவிற்கு ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே, ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் யஷ். அவ்வளவு தான், நீங்க எல்லாம் ஒரு அப்பா, அம்மாவா, உடனே இரண்டாவது குழந்தை தேவையா என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

தற்போது இந்த காதல் தம்பதிக்கு இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனது மகனின் பூஞ்சு கரங்கள், தன் விரலை பற்றி இருப்பது போன்ற புகைப்படத்தை யஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த க்யூட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் யஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.