தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் பிரபலமாக்கியது என்றால், அது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சிக்கு பின், பல விளம்பரங்கள், சீரியல்கள், மற்றும் திரைப்பட இயக்குனராகவும் மாறினார் லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது நாம் அறிந்தது தான்.

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் மூலம், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, கிடைத்தது மக்களின் ஆதரவு மட்டும் அல்ல அவர்களுடைய நம்பிக்கையும் தான். இதனால் இவரை வைத்து, பல விளம்பரங்கள் ஒளிபரப்பானது.

அந்த வகையில் 'KFJ ' கேரளா பேஷன் ஜிவல்லரி தன்னுடைய நகை கடை விளம்பரத்தில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை நடிக்க வைத்தது. நகை சேமிப்பு திட்டம், மற்றும் பழைய நகைகளை எந்த சேதாரம், செய்கூலி, இல்லாமல் இந்த திட்டத்தின் மூலம் பெற்று கொள்ளலாம் என இந்த விளம்பரத்தில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சை நம்பி பலர், இந்த நகை கடையில் கோடி கணக்கில் பணம் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே எந்த லாபமும் இன்றி, இயங்கி வந்த இந்த நகைக்கடையை நம்பி சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த பலருக்கும் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.  பணம் சேமித்ததற்கான காசோலைகளை எடுத்து சென்று வாடிக்கையாளர்கள் வங்கியில் போட்டபோது, நகை கடை சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

பணம் கிடைக்கவில்லை என்றாலும், நகையையாவது கிடைக்கும் என நினைத்த மக்களும் மேலும் பேரதிர்ச்சி தான் காத்திருந்தது. இந்த நகைக்கடையில் உரிமையாளர் வங்கியில் வைத்திருந்த 32 கோடி கடனுக்காக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாம். எனவே, இந்த திட்டத்தில், சேர்ந்து பணம் செலுத்திய பலர் ரூ.17 கோடியை எப்படி மீட்பது என தெரியாமல் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

மேலும் விளம்பரத்திற்கு பாக்கி வைத்ததற்காக இந்த கடையின் உரிமையாளர் சுனில் செரியன் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.