kerthisuresh fiear for pubilc comment

'இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே தோல்வியடைந்ததால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாமல் போனது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின் இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த 'ரஜினி முருகன்' படம் ரிலீஸ் ஆகி மிகப் பெரிய ஹிட் கொடுத்ததால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்தப் படமும் வெற்றியடையவே முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தன.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் தனுஷ் ஜோடியாக நடித்த 'தொடரி' படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இவருடைய நடிப்பைப் பார்த்து பலரும் விமர்சித்தனர். 

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் விஜயுடன் நடித்து வெளிவந்த, பைரவா திரைப்படமும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.

தற்போது இவர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடன் சண்டக்கோழி 2 , விக்ரமுடன் சாமி 2 மற்றும் மகாநதி ஆகிய படங்களில் நடித்து வந்தாலும் தொடர்ந்து இவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகிறதாம்.

இதுகுறித்து கூறியுள்ள கீர்த்தி நான் தொடரி நடித்த போது என் சிரிப்பு பற்றி விமர்சனம் வந்தது அதனை மாற்றிக்கொண்டேன், இடையில் நான் எடை கூடிவிட்டதாக கூறி விமர்சனம் செய்தனர். தற்போது என்னுடைய எடையை குறைத்துள்ளேன். இப்படி என்னைப் பற்றி தொடர்ந்து வரும் விமர்சனங்களை கவனித்து நான் என்னை மாற்றிக்கொண்டு வந்தாலும் அடுத்து என்ன விமர்சனம் செய்யப் போகின்றனர் என எனக்கு பயமாக உள்ளது என கூறியுள்ளார்.