Asianet News TamilAsianet News Tamil

வேஷ்டியை மடித்து கட்டு... ப்ரீத்தி ஷர்மாவுடம் 'வாடா ராசா' பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட கென் கருணாஸ்!

திரைப்படங்களில் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள, கென் கருணாஸ் தற்போது 'வாடா ராசா' என்கிற பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

ken karunas vada rasa song released
Author
Chennai, First Published Aug 19, 2021, 7:01 PM IST

திரைப்படங்களில் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள, கென் கருணாஸ் தற்போது 'வாடா ராசா' என்கிற பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

பாடகர், காமெடி நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் கருணாஸ் மகன் கென். இவர் நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த, 'அசுரன்' திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ஹீரோக்களுக்கு இணையாக சில போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த இவர், தற்போது 'வாடா ராசா' என்கிற பாடலுக்கு, ப்ரீத்தி ஷர்மாவுடன் செம்ம ஆட்டம் போட்டுள்ளார்.

ken karunas vada rasa song released

இந்த பாடலை, கிரேஸ் கருணாஸ் பாடியுள்ளார். விவசாயம், நெசவு, போன்ற தொழில்களை பெருமை படுத்தும் விதமாக இந்த பாடல் அமைத்துள்ளது. ஒரு திருவிழா போல் 'வாடா ராசா' ஆல்பம் பாடல் முழுவதும் மிகவும் கலர் ஃபுல்லாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலும் சாண்டி மாஸ்ட்டர் நடனம் அமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆல்பம் சோனி லேபிளுக்காக தயாரிப்பு நிறுவனமான "தி ரூட்" இந்த ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது.

ken karunas vada rasa song released

அதே போல் எப்போதும் மாடர்ன் உடைகளில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடும், நடிகை ப்ரீத்தி ஷர்மா இந்த பாடலில் பாவாடை தாவணியில் செம்ம ஆட்டம் போட்டுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இந்த பாடலை இன்று வெளியிட்டு ஆல்பம் பாடல் குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios