உச்சத்தில் இருக்கும் விஜய், விக்ரம், சூர்யாவுடன்  நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது அடுத்த தலைமுறை நடிகர்களுடன் ஜோடி போடத் தொடங்கியுள்ளார்.

உச்சத்தில் இருக்கும் விஜய், விக்ரம், சூர்யாவுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது அடுத்த தலைமுறை நடிகர்களுடன் ஜோடி போடத் தொடங்கியுள்ளார்.

தமிழில் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகனில் நடித்த பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார். தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என பலரும் கீர்த்தி சுரேஷை தங்களுக்கு ஜோடியாக்கினர். ஏன் கதையின் நாயகியாக இவர் நடித்து வெளியான நடிகையர் திலகமும் வரவேற்பை பெற்றது.


'கொம்பு வச்ச சிங்கம்' - சற்று வித்தியாசமான பெயர்தான். சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகர் சசிகுமாருடன் இந்த படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? நம்ம கீர்த்தி சுரேஷ்தான். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்.

'கொம்பு வச்ச சிங்கம்' - பெயருக்கு ஏற்ற மாதிரியே கிராமத்துக் கலக்கல் படமாம். காரைக்குடி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் கண்ணுக்கு விருந்தளிக்கும் லொகேஷன்களில் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சூரி, யோகிபாபு, ஆரவ் உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் பங்கேற்று களைகட்டச் செய்ய இருக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்க திபு நினன் தாமஸ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.