நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படங்கள் அவருடைய திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  குறிப்பாக 'நடிகையர் திலகம் ' திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று தந்ததோடு, விருதுகளையும் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.  மேலும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இந்த படத்திற்கு 'rang de ' என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும், இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக தான் பணிபுரிவதாக பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அட்லுரி வெங்கி இயக்கியுள்ள இந்த படத்தை, நாகவம்சி தயாரிக்க உள்ளார்.  இந்த படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும் என ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.  இதிலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தின் பெயர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.