keerthi suresh issue

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி கதாநாயகிகளை ஓரம் கட்டிவிட்டு, முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

இந்நிலையில் அவர் பெரிதும் எதிர் பார்த்த பைரவா திரைப்படம் தோல்வியடைந்தாலும், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்த்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல முன்னணி மலையாள நடிகருடன் ஜோடியாக நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோது, அப்பா வயதுடைய நடிகருடன் தன்னால் நடிக்க முடியாது என்றும், 50 வயதை தாண்டிய நடிகர்களுடன் நடிக்க கூடாது என்கிற கொள்கையோடு தான் இருந்து வருவதாக கூறினார்.

ஆனால் கோலிவுட்டில் முன்னணி நடிகரான விக்ரமுக்கு தற்போது 51 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று 50 வயதை தாண்டிய மலையாள நடிகருடன் நடிக்க முடியாது என கூறிய கீர்த்தி, தற்போது மட்டும் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்துள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் சிலர், கீர்த்தி ஒரு பொய் புழுவி என்றும் சொன்னது ஒன்று செய்வது வேறொன்று பணத்தை பார்த்ததும் மாறிவிட்டார் என கலாய்த்து வருகின்றனர்.