Keerthy Suresh to go through a transformation for Savitri biopic Mahanati

உடல் எடையை ஏற்றிவிட்டு அதைக் குறைக்க முடியாமல் அனுஷ்கா கஷ்டப்பட்டதால் சாவித்திரி வரலாற்று படத்துக்காக தனது எடையை ஏற்ற மறுத்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ். 

இஞ்சி இடுப்பழகி என்ற படத்துக்காக அதுவரை எந்த ஹீரோயினும் எடுக்காத ரிஸ்க்காக தனது உடல் எடையை பயங்கரமாக ஏற்றினார் அனுஷ்கா. ஏற்றியவரால் இறக்க முடியவில்லை. இது அவரது சினிமா கேரியரை கடுமையகா பாதித்தது.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் அவரை ஸ்லிம்மாக காட்டவே பல கோடிகள் செலவு செய்து கிராஃபிக்ஸ் செய்தனர். இப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயக்கம் காட்டுகிறார் அனுஷ்கா. 

கீர்த்தி சுரேஷ் இப்போது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடியில் நடித்து வருகிறார். இதில் சாவித்திரி வேடத்தில் நடிக்க அவரைப் போலவே சற்று குண்டாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் மறுத்து விட்டாராம். 

எனவே வேறு வழியில்லாமல் கீர்த்தியை கிராஃபிக்ஸ் மூலம் சற்று குண்டாக்க முயற்சி செய்கின்றனர்.