’சர்கார்’ படத்தில் டம்மி கேரக்டர் தந்ததை சரிக்கட்டும் வகையில் தான் ரஜினியுடன் இணையும் படத்துக்கும் கீர்த்தி சுரேஷையே ஹீரோயினாக்கும் முயற்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் ஈட்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

'பேட்ட’ படத்தை ‘நாற்காலி’என்று பெயர்சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் படத்தில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், ‘கத்தி’யில் விவசாயிகள் பிரச்சினைகளையும், ‘சர்கார்’ படத்தில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார். தற்போது ரஜினி நடிக்க உள்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக தனது சர்கார் பட நாயகியை முருகதாஸ் வலுவாக சிபாரிசு செய்வதாகக் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சிவகார்த்திகேயன், விஷால், விக்ரம் என்று வரிசையாக சில ஆலமரங்களையே சாய்த்துவிட்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.