இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் “பெண்குயின்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சக்கைப்போடு போட்ட நிலையில், இன்று டீசர் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க:  யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!

“பெண்குயின்” படத்தின் டீசரை த்ரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்ஸி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரை அந்தந்த மொழிகளில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் 4 நடிகைகள் வெளியிட்டுள்ளனர். தன்னுடன் பணிபுரியும் நடிகைகளை போட்டியாக மட்டுமே நினைக்காமல் சமகால நடிகையான கீர்த்தி சுரேஷுக்காக 4 நடிகைகள் முதன் முறையாக ஒன்றிணைந்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க:  சிம்புவிடம் இருந்து நயன்தாராவிற்கு தொற்றிய பழக்கம்... அப்போ கும்முனு ஆனதுக்கு இதுதான் காரணமோ?

இதற்கு முன்பு ஜோதிகாவின்“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை போலவே, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பெண்குயின்” திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிடப்பட்டது. தேசிய விருது பெற்ற பின்னர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், “பெண்குயின்” படத்தில் நிறைமாத கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என பல பரிமாணங்களில் நடித்துள்ளார். இதற்காக தன்னுடைய உடல் தோற்றைத்தையே முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: அனுஷ்காவா, சிரஞ்சீவியின் தம்பி மகளா யாரை மணக்கப்போகிறார் பிரபாஸ்?... அவரே கூறிய அதிரடி பதில்...!

இன்று டீசர் வெளியாகியுள்ள நிலையில், வரும் 19ம் தேதி டிரெய்லரை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசையில் வசனங்கள் இன்றி வெளியாகியிருக்கும் டீசர் மிரட்டி தள்ளியுள்ளது. ஒரு நிமிடம் 19 விநாடிகள் ஓடக்கூடிய டீசரில் குழந்தையை காணாமல் தவிக்கும் தாயாக கீர்த்தி சுரேஷ் தனது ஏதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டீசரின் இறுதியில் காட்டப்படும் காட்சிகள்... படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது. மிரட்டலான டீசர் இதோ...