நடிப்பு, காஸ்டியும் டிசைன், பாடல் என பல திறமைகளோடு கலக்கும் கீர்த்தி சுரேஷ் நல்லா கவிதை கூட எழுதுவங்களாம். 

கவிதை எழுதுவது குறித்தும் அவர் எழுதிய ஒரு கவிதையையும்  சாமீபத்தில் ஒரு நாளிதழில் கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இது குறித்து அவர் கூறுகையில்... "என்னுடைய தாய் மொழி தமிழ் தான். கல்தோன்றி மண் தோன்றா காலத்து மொழியின் தொடர்ச்சி தானே நீங்களும், நானும். தமிழ் குறித்து எல்லோருக்கும் இருக்கிற பெருமிதம் எனக்கும் உண்டு.

மொழியோட விளையாடுறது தான் கவிதை. சின்ன வயசுலே இருந்தே சின்னச் சின்னதா கவிதை எழுதுகிற வழக்கம் எனக்கும் உண்டு. என்னை நான் கவிஞர் என்று சொல்லிக்கத்தான் பிரதாணமாக  விரும்புகிறேன். அடுத்தது தான் நடிகை என்கிற அடையாளம் கூட. 

இப்போது கூட தொடர்ந்து கவிதை எழுதுகிறேன் சில கவிதை நன்றாக வரும். சில கவிதை கொஞ்சம் சொதப்பி விடும். அது மாதிரி சரியா வராததை எல்லாம் கிழிச்சிப் போட்டுருவேன். நல்ல கவிதைகளை பத்திரப்படுத்துவேன். "சண்டக்கோழி - 2 ' நடிக்கும் போது என்னுடைய கவிதை ஆர்வத்தை இயக்குனர் லிங்குசாமி சார் கவனிச்சார். அவரும் கவிஞர்தானே? ' உன் கவிதையெல்லாம் கொடும்மா , நான் புக்கா போடுறேன்னு சொல்லியிருக்காரு. தமிழில் இப்போ வருகிற நிறைய கவிதை தொகுப்புகளை வாசிக்க ஆரபிச்சிருக்கேன். என்னோட கவிதைகளை வாசிக்க கேரளா ரசிகர்கள் சிலரும் ஆர்வத்தோட கேட்டாங்க. அவங்களுக்காக மலையாளத்துல மொழி மாற்ற முயற்சித்தேன். அது சரியா வரலை" என்று கூறி அந்த நாளிதழுக்கு ஒரு கவிதை ஒன்றையும் கூறியுள்ளார்.

அந்த கவிதை இதோ:

"பூமாலை யோசிக்கிறது...
எங்கே செல்வது?
உயிர் மூச்சின் 
வெப்பத்திலுருக்கும் 
தேகத்திடமா?
உணர்வின்றி 
சில்லிட்டிருக்கும் 
உடலிடமா?
எங்கே சென்றாலும் 
பூமாலை 
தன மனதை 
மட்டும் இழக்காது" என்று கூறி இந்த கவிதையை முடித்துள்ளார். கீர்த்தியின் இந்த கவிதை உங்களுக்கு பிடிச்சிருக்கா என்று நீங்களே சொல்லுக பாஸ்.