சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், மற்றும் ரெமோ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் மிக விரைவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தவர் கீர்த்தி சுரேஷ், இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த தொடரி மற்றும் பைரவா ஆகிய படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் தொடர்ந்து சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட  ஒரு சில கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.  மேலும் தமிழில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை. முன்னணி நடிகர்கள் தான் இந்த உயரத்தில் என்னை நிற்கவைத்து விட்டார்கள்.

அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரி. படத்தில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எனக்கு வரும் வாய்ப்பை நான் விட்டுவிடாமல் பிடித்து வருகிறேன் என கூறினார்.

அப்போது எல்லோருடனும் நடித்து விட்டீர்கள் அடுத்து நடிப்பது அஜித்துடன் தானா என கேட்டபோது தெரியவில்லை. நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.