தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி ஒரு சில படங்கள் நடித்ததுமே முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து மற்ற நடிகைகளை பொறாமையில் ஆழ்த்தி வருபவர் நடிகை கீர்த்திசுரேஷ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் கடைசியாக நடித்து வெளிவந்த தொடரி மற்றும் பைரவா ஆகிய இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது, மேலும் கீர்த்தியும் நடிப்பை பார்த்து பலரும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தற்போது சூர்யா ஜோடியாக நடித்து வரும், ஒரே தமிழ் படம் தான் இவர் கையில் உள்ளது, எப்படியும் இந்த படத்தில் நல்ல பர்பாமென்ஸ் கொடுக்க வேண்டும் என தீவிர பயிற்சி எடுத்து வருகிறாராம்.

அதனால் கேரவனுக்குள்ளேயே தன் அம்மா முன்னாள் ஹீரோயின் மேனகா முன் ரிகர்சல் பார்க்கிறாராம். அதனால் தான் கேரவனுக்குள் சென்றால் அவ்வளவு லேட் ஆகுமாம் இவர் வெளியே வருவதற்கு.