தமிழ் - தெலுங்கு என இரண்டு வெற்றி குதிரைகளில் சவாரி செய்து கொண்டிருக்கும் கீர்த்திசுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் - தெலுங்கு என இரண்டு வெற்றி குதிரைகளில் சவாரி செய்து கொண்டிருக்கும் கீர்த்திசுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த ஷாலினி அஜித்! எந்த படத்தில் தெரியுமா?

வந்த வேகத்தில் வாரிசு நடிகர் - நடிகைகள் திரையுலகிற்கு டாட்டா காட்டி விட்டு சென்ற நிலையில்... ஆரம்பத்தில் தடு மாறினாலும், நிலையான இடத்தை பிடித்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடனும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். முன்னணி ஹீரோக்களின் படத்தால் தான் கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் உயர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்த போது, 'மகாநடி' படத்தின் மூலம் மொத்த கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த படத்தில் இவர் வெளிப்படுத்திய தனித்துவமான நடிப்பு, இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இதை தொடர்ந்து சமீக காலமாக கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவரது கை வசம், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து வரும் 'அண்ணாத்தே', மற்றும் செல்வராகவனுடன் இணைந்து நடித்து வரும் 'சாணிக்காகிதம்' ஆகிய படங்கள் உள்ளது.

மேலும் செய்திகள்: 15 மாத குழந்தைமுதல் 83 வயது பாட்டி வரை... குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா! இளம் இயக்குனரின் பதிவு!

தெலுங்கில் 'குட்லக் சகி' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நிதின் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'ரங் தே' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.