நடிகை கீர்த்தி சுரேஷ், 'ரஜினி முருகன்', 'ரெமோ' போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், இவரின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடி.

இந்த படத்தின் வெற்றிக்கு பின்,  இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்த வண்ணம் உள்ளது.  தற்போது பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.  பிரபல முன்னணி நடிகர் அஜய்தேவ்கனுக்கு மனைவியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.  இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 

ரஜினிமுருகன், தானா சேர்ந்த கூட்டம், மகாநடி, போன்ற படங்களில் கொஞ்சம் குண்டாக தெரிந்த கீர்த்தி சுரேஷ்,  இப்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு, உடல் எடையை குறைத்துள்ளார்.

ஏற்கனவே இவர் ஜிம்மில் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது.  அதைத் தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.  இதில் மிகவும் ஒல்லியாக தெரிகிறார் கீர்த்தி.  எனினும் ரசிகர்கள் சிலர் கீர்த்தி சுரேஷ் குண்டாக இருந்த போது தான் அழகாக இருந்தார் என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.