விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரு படத்தின் படப்பிடிப்பு, முடிவடையும் போது படக்குழுவினர் பொதுவாக எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

ஆம் , நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. 

விஷால் , லிங்குசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய படமான சண்டக்கோழி 2வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19 வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.