நடிகை கீர்த்தி சுரேஷை சிறந்த நடிகை என்று நிரூபித்து அடுத்த கட்டத்திற்கு இவரை எடுத்த சென்ற திரைப்படம் என்றால் அது நடிகையர் திலகம் திரைப்படம் தான். இந்த திரைப்படம் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த படத்திற்கு பிறகு கீர்த்தி பல படங்களில் பிஸியாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை எந்த படத்திலும் கமிட் ஆகாமல் ஷாக் கொடுக்கிறார். 

இவரிடம் கதை சொல்லவும், இவரை திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யவும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் இருந்தாலும் அவர்களை காத்திருக்க சொல்லி இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்:

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படமே தோல்வி அடைந்தாலும், இந்த படத்தை தொடந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுத்தந்தது. 

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக 'தொடரி' , விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்ததால் கீர்த்தி பின்தங்கினார். எனினும் அடுத்ததாக இவர் நடித்து வெளியான 'ரெமோ' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. 

சாவித்திரி வாழ்கை வரலாறு:

கீர்த்தி தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க துவங்கினார். அப்போது இவரே எதிர்ப்பார்க்காத வாய்ப்பு இவருக்கு வந்தது. அது தான் இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கிய பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்கை வரலாறு திரைப்படம். 

விமர்சிக்கப்பட்ட கீர்த்தி:

சாவித்திரியாக கீர்த்தி நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியான போது, கீர்த்திக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது. அவரின் தோற்றத்திற்கு இவர் எப்படி பொருந்துவார், தெலுங்கு மொழி தெரியாத நடிகை எப்படி தெலுங்கில் சிறப்பாக நடிக்க முடியும் என்றெல்லாம் கூறப்படாது.

சாதித்த நாயகி:

இதுபோன்ற விமர்சனங்களை தகர்க்கும் விதத்தில், வைராக்கியமாக நடித்து, அனைவருடைய வாழ்த்துக்களையும் பெற்றார் கீர்த்தி. இந்த திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகும் முன்பே விஜயின் 'சர்கார்' விக்ரமுடன் 'சாமி2' விஷாலுடன் 'சண்டை கோழி2' ஆகிய படங்களில் கமிட் ஆகியிருந்தார் கீர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி முடிவு:

இந்நிலையில் அந்த மூன்று படங்களில் நடித்து கொடுத்த பின்பு தான், தன்னை வைத்து இயக்கும் முடிவில் உள்ள மற்ற இயக்குனர்களுக்கு கால் ஷீட் கொடுப்பேன் என்ற முடிவில் உள்ளார் கீர்த்தி. இதனால் கதைக்கேட்க கூட மறுத்து வருகிறாராம். இவரின் இந்த அதிரடி முடிவால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குனர்கள் ஆடிப்போய் உள்ளார்களாம்.