keerthi suresh fans attacked selam police
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவருக்கும் தற்போது பலர் ரசிகர்மன்றம் ஆரம்பித்து அதனை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் பிரபல நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். மேலும் அங்கு இவருக்காக அமைக்கப்பட்ட மேடையில் தன்னுடைய அனுபவங்கள் ஒரு சிலவற்றை பகிர்ந்தார்.
ரசிகர்களுக்காக ஒரு குட்டி நடனம் ஆடி அவர்களை மகிழ்வித்தார் கீர்த்தி சுரேஷ்.
மேலும் தற்போது முன்னணி நடிகையாக வளர்த்து வரும் கீர்த்தி சுரேஷ், சேலத்திற்கு வருகிறார் என்று தெரிந்ததும், அந்த ஊரை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ரசிகர்கள் பலர் அவரை பார்க்க அந்த கடை முன் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர், மேலும் முண்டியடித்து கீர்த்திசுரேஷை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர், இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
