வாரிசு நடிகையாக அறிமுகம் கொடுத்து தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ படங்கள் தொடர்ந்து வெற்றிபெறவே இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விஜயுடன் பைரவா படத்தில் நடித்து முடித்துள்ள இவர் தற்போது சூர்யாவுடன் நடித்து வருகிறார். அடுத்தடுத்து இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் நேனு லோக்கல்.

இப்படம் சொன்ன தேதியில் வரவில்லை, இதனால் இந்த படத்தின் நாயகன் நானி மற்றும் தயாரிப்பாளர் பக்கத்தில் ஏதோ பிரச்சனை, அதனால் தான் படப்பிடிப்பு தள்ளிப்போனதுஎன கூறப்பட்டதாகவும் ,அதன் காரணமாக தான் படத்தின் ரிலிஸ் தேதியும் தள்ளிப்போனது என கூறப்பட்டது.

ஆனால், நானியோ ‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார், அவரின் கால்ஷிட் பிரச்சனையே, படத்தின் ரிலிஸில் தாமதம்’ என கோபமாக கூறி கீர்த்தியை கோர்த்துவிட்டுள்ளார்.

இதன் காரணமாக இது வரை எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்த கீர்த்தி முதல் முறையாக இந்த கால்ஷீட் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.