keerthi suresh and trisha samy 2 update

நடிகர் விக்ரம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ள சாமி 2 திரைப்படத்தில், கதாநாயகிகளாக திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர்.

தற்போது திரிஷாவின் மார்க்கெட் டல்லடித்து விட்டதால், சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்குதான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக படக்குழுவினர் தெரிவிக்கும்போது... சாமி 2 படத்தில் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்கும் சமமான நிலையில்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

முதல் பகுதியில் திரிஷா சம்மந்தப்பட்ட, காட்சிகள் இடம் பெறும் என்றும், இரண்டாம் பகுதியில் கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

திரிஷா பல ஹிட் படங்களைக் கொடுத்தாலும், சமீப காலமாக அவருக்கு பேர் சொல்லும் விதத்தில் நல்ல படங்கள் எதுவும் அமையவில்லை. அதே போல் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த பைரவா திரைப்படம் கலவையான விமர்சனங்களைதான் பெற்றது. இது வரை சிவகார்த்திகேயனுடன் நடித்ததுதான் இவருக்கு ஹிட் படமாக அமைந்தது. எனவே இந்தப் படத்தில் திரிஷா மற்றும் கீர்த்தி இருவருமே போட்டிபோட்டு நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.