தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புக்களை, ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கொடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான, செல்வராகவன், முதல் முறையாக நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப்படத்தின் பெயருடன் கூடிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இதுவரை, தன்னுடைய படங்களில் கூட ஒரு செயலில் தலை காட்டாத செல்வராகவன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். 'சாணி காகிதம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

கையில் கத்தியுடன் செல்வராகவன் நிற்பது போன்றும், துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ் நிற்பது போன்றும் இந்த போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இவர்கள் முன் ரத்த கரையுடன் வேன் ஒன்றும், சில நபர்களும் நிற்கிறார்கள். 

இந்த படத்தை ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ’ராக்கி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் இதோ...