Asianet News TamilAsianet News Tamil

கீர்த்தி சுரேஷின் அடுத்த படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறதா? வெளியான தகவல்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடித்துள்ள 'சாணிக்காகிதம்' படத்தில் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

keerthi suresh and selvarahavan movie release in ott?
Author
Chennai, First Published Aug 19, 2021, 4:33 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடித்துள்ள 'சாணிக்காகிதம்' படத்தில் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பல வித்தியாசமான கதைகளை இயக்கி சூப்பர் ஹிட் இயக்குனர் என பெய்ரரெடுத்த, முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன், முதல் முறையாக 'சாணிக்காகிதம்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறியுள்ளார்.  இவருடன் கீர்த்தி சுரேஷும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது கொரோனா அலைக்கு முன்பு துவங்கிய நிலையில், நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

keerthi suresh and selvarahavan movie release in ott?

இந்த படத்தை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'ஆரண்யகாண்டம்' திரைபடத்தில் உதவி இயக்குனராகவும், 'இறுதிச்சுற்று' படத்தில் வசனகர்த்தாவாகவும் இருந்த அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் செல்வராகவனின் வித்தியாசமான தோற்றம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

keerthi suresh and selvarahavan movie release in ott?

தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் முதல்கட்டமாக செல்வராகவன் டப்பிங் பேசிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  இதுவரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை  என்றாலும் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios