keerthi suresh advice youngsters

நீட் தேர்வின் திணிப்பால் அரியலூர் மாணவி அனிதா தன்னுடைய மருத்துவப்படிப்பை படிக்க முடியாத சோகத்தில் தற்கொலை செய்துக்கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுகுறித்து பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.

இதே போல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அனிதா என்னவாக நினைத்தாரோ... அவருடைய கனவு எதுவோ... இனி அதை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது.ஒரு எதிர்கால மேதாவியை, நல்ல உள்ளம் கொண்ட பெண்ணை, பெண்ணினத்தின் சக்தியை இழந்துவிட்டோம் அதற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இளைஞர்களே உயிரை மாய்த்துக்கொள்வது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்னவே தற்கொலையை கையில் எடுக்காதீர்கள் இது தன்னுடைய வேண்டுகோள் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.