ராக்கெட் வேகத்தில் முன்னணி நாயகியாக வளர்த்து கொண்டிருப்பவர் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த தொடரி தோல்வியை சந்தித்தாலும், சமீபத்தில் வெளியான ரெமோ மீண்டும் இவர் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது.
இவர் தற்போது இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததுதான்.
கொஞ்சம் வளர்த்துவிட்ட நாயகிகளை கூட விட்டு வைக்காத கிசுகிசுக்களின் இருந்து, முன்னணி நடிகர்களுடன் நடித்தும் விலகியே இருக்கிறார் கீர்த்தி இதை பற்றி மேலும் அவர் கூறிய போது.
தன்னை பற்றி கிசு கிசுக்கள் வாராத்திற்கு காரணம், நான் அனைவரிடமும் சகஜமாக பேசுகிறேன், அதே போல படப்பிடிப்பு தளத்தில் கூட தேவையில்லாத அரட்டையெல்லாம் அடிக்க மாட்டேன் என்று கூறினார் .
மேலும் தனக்கான காட்சியை முந்தைய நாளே கேட்டு தெரிந்துக்கொண்டு அடுத்த நாள் படப்பிடிப்பிற்கே வருவாராம். இதனால் தன்னை பற்றி கிசுகிசுக்கள் வருவதில்லை என கூறியுள்ளர் கீர்த்தி.
கீர்த்தி சுரேஷின் இந்த பகிர்வு கண்டிப்பாக வளர்த்து வரும் நாயகிகள் தங்களை பற்றி கிசு கிசு வர கூடாது என்று நினைப்பவர்களுக்கு சிறந்த அட்வைஸ் என்றே சொல்லலாம்.
