keerthi suresh acting sivakarthikeyan seema raja movie

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்களில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபல நாயகியாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். இந்த படங்களின் வெற்றி தான் கீர்த்தியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

இந்த படங்களை தொடர்ந்து, தெலுங்கில் பிஸியாகிவிட்ட கீர்த்தி, தற்போது மகாநதி படத்தின் தனித்துவமான வெற்றிக்கு பிறகு அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய நடிகையாக மாறிவிட்டார்.

இந்த நிலையில், தற்போது தமிழில் விஜய் 62, விக்ரமின் சாமி 2, விஷாலின் சண்டக்கோழி 2, என சில படங்களில் நடித்து வருகிறார், மேலும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சீமராஜா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதும், எந்த மாதிரியான வேடம் என்று கூட கேட்காமல் கூட உடனே ஸ்பாட்டிற்கு வந்து நடித்துக் கொடுத்தாராம் கீர்த்தி சுரேஷ்.