கீர்த்தி சுரேஷ் தற்போது 'நடிகையர் திலகம்' சாவித்திரியின் வாழ்கை வரலாறு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. 

தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிகவும் மும்புரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62வது திரைப்படம், சாமி 2 , சண்டகோழி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்தப்படங்களில் நடித்து முடித்த பின் மலையாளத்தில் எடுக்கப்பட உள்ள வரலாற்று திரைப்படமான 'யாத்ரா' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இது ஆந்திர முதல் மந்திரியாக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் படமாக எடுக்கப்பட உள்ளது.

ராஜசேகர ரெட்டியாக மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடிக்க இருக்கிறார். அவருடைய மருமகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். தற்போது படப்பிடிப்புகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ராஜசேகர ரெட்டியாக நடிக்கும் மம்மூட்டி, தனது நெற்றிக்கு மேலே உள்ள தலைமுடியை சவரம் செய்து இருக்கிறார் இது அவருக்கு வித்தியாசமான தோற்றத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.