நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் நாகேஷ் குக்குனுர் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்துள்ள 'குட்லக் சகி' படத்தின் டீசர், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இந்த டீஸருக்காக, 3 டாப் ஹீரோக்கள் இணைந்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தின் டீசரை, தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் பிரபாஸும், மலையாளத்தில் பிரிதிவிராஜ் ஆகியோர் வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குட்லக் படத்தில் கீர்த்தி சுரேஷ் சோலா ஹீரோயினாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஆரி நடித்துள்ளார்.

ஒரு ஊரே கீர்த்திசுரேஷை அதிர்ஷ்டம் இல்லாத பெண் என்று கூறும் போது, அதையெல்லாம் தாண்டி, ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளரும் கீர்த்தி சுரேஷ் எப்படி துப்பாக்கி சுடும் வீராங்கனையாக உருவாகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. கீர்த்தியை சுற்றி சுற்றி காதலிக்கும் காதலனாக வருகிறார் ஆதி. இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதம் உள்ள படப்பிடிப்பு, கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும் துவங்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது. இந்த படத்தை, சுதிர் சந்திரா, மற்றும் ஷ்ரவ்யா வர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஜெகபதி பாபு, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான 'பெண்குயின்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறா விட்டாலும், இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இந்த படத்தின் டீசர் இதோ...