பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்,  தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள திரைப்படம் தும்பா. 

இந்த படத்தில் கதாநாயகனாக கனா படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் நடித்துள்ளார்.  இந்தப் படத்தை ஹரிஷ்ராம் என்கிற இயக்குனர் இயக்கியுள்ளார்.  இப்படம் முழுக்க முழுக்க காட்டுக்குளேயே படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கியவாறு, இந்த படத்தின் இயக்குனருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசுகையில்,  சில படங்களின் நடிக்க வந்த வாய்ப்பை நானே தவிர்த்துள்ளேன்.  அதோடு என்னையும் சில இயக்குனர்கள் நிராகரித்துள்ளனர். அதற்கு காரணம் ஒல்லியான தோற்றம் மற்றும், நிறம் என்றும் கூறலாம். ஆனால் தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தவர் தும்பா பட இயக்குனர் ஹரிஷ்ராம் என கண்களில் கண்ணீரோடு கூறினார்.