வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இவர் நடிப்பில் நாளை வரவிருக்கும் ரெமோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார் வருகிறார். 

அப்போது பேசிய இவர் ‘தனுஷ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் போது முதல் ஒரு சில நாட்கள் மட்டுமே பதட்டமாக இருந்தாலும், பிறகு ஜாலியாகவும் சகஜமாகவும் சென்றது.

ஆனால், பைரவா படத்தில் விஜய் சாருடன் நடிக்கும் போது, இன்றும் அவர் அருகில் உட்காரும் போது ஒரு பயம் இருக்கும்.

அவை மரியாதை கலந்த பயம், ஏனெனில் நான் அவருடைய தீவிர ரசிகை, அதனால் தான்’ என கூறியுள்ளார்.