நடிகர் ஜீவா கடைசியாக, இயக்குனர் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு 2 படத்தில், நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றதால் இந்த படத்தில் நடித்திருந்த, ஜீவா மற்றும் ஜெய் ஆகிய இருவருக்குமே கொஞ்சம் மார்க்கெட் உயர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தனி ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் ஒரு சில காரணங்களால் வெளியாகாமலேயே உள்ளது.

அந்த வகையில் இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள. ஜீவா நடித்து முடித்த 'கீ' படம் ஒரு வருடத்தை தாண்டியும் இன்னும் ரிலீஸ் செய்யாமல் உள்ளது.  இருந்த நிலையில் தற்போது படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

சயின்ஸ்பிக்சன் மற்றும் த்ரில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ஏற்கனவே ஓரிரு முறை ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேதியில் ரிலீஸ் செய்யப்படுமா என்பது சந்தேகம் தான் என்பது போல் திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.