விஜய் டிவி, தொலைக்காட்சியில் ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் மத்தியில், எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் இல்ல தரசிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டு சரியாக ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா ஆகிய மூன்று பேர் வெளியேறியுள்ளனர். 

இது ஒரு புறம் இருக்க, வயல் கார்டு சுற்று மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உள்ளே செல்ல உள்ள, பிரபலங்கள் தேர்வு தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கயல், திரிஷா இல்ல நயன்தாரா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கயல் ஆனந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. 

ஆனால், இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் இதில் உண்மை இல்லை என்றும், ஆனந்தி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வில்லை என தெரியவந்துள்ளது.