மலையாள நடிகையான காவியா மாதவன் சமீபத்தில் தான் பிரபல நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதே போல திலீப்பிற்கும் இது இரண்டாவது திருமணம் தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த திருமணத்திற்கு அவரது ரசிகர்கள் சிலர் வரவேற்பு தெரிவித்தாலும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காரணம் நடிகர் திலீப்க்கு ஏற்கனவே நடிகை மஞ்சுவாரியாருடன் திருமணம் நடைபெற்று பின் விவாகரத்தானது. அவர்களின் பிரிவிற்கு காரணம் காவியா தான் என்று சிலர் கடுமையாக அவரை விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காவ்யா மாதவன் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார், அதில் சிலர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டைம் லைனில் தரக்குறைவாக தகவல் அனுப்பி வருவதாகவும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.