பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும், ஒரு போட்டியாளர் வெளியேற வெளியேற பிரச்சனைகள் குறையும் என பார்த்தால், நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது.

என்ன தான் சண்டை சச்சரவுகள் வந்தாலும், ஒன்றாக ஒன்றுமையாக இருந்த போட்டியாளர்கள் இப்போது இரண்டு தரப்பாக பிரிந்து சண்டை போட்டு வருகிறார்கள். லாஸ்லியாவை தவிர மற்ற பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக கூடி உள்ளனர். ஆண் போட்டியாளர்கள் தனியாக பிரிந்து பெண்கள் அடிமை படுத்துவதாக கூறுவது பொய் என கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ஜெயிலில் இருந்த கஸ்தூரி, வெளியே வந்ததும் பிரச்னையை துவங்கியுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் கஸ்தூரி, நீதி நியாயம் பற்றி ஏதோ பேச, ஆண்கள் அணியினர் அனைவரும் வீட்டிற்குள் செல்கின்றனர். குறிப்பாக கவின் லாஸ்லியா கையை பிடித்து இழுத்து கொண்டு செல்கிறார். கஸ்தூரி ஏதோ, சாண்டியிடம் பேச வர, நீங்கள் ஆண்கள் அண்ணனை கேசில் இழுத்து விட்டு விடுவீர்கள் என சாண்டியை அழைத்து கொண்டு செல்கிறார். பின் ஏதோ கஸ்தூரி சண்டைபோடுவது போல் பேச, கவின் கஸ்தூரியின் வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசுவது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தெரிகிறது.