சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகர் கவின், தற்போது பிக்பாஸ் வீட்டில்  போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருபவர்கள் ஒவ்வொருவரும், ஏதேனும் ஒரு நோக்கத்தில் தான் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

அப்படிதான் நடிகர் கவினும், இவர் ஏற்கனவே முதல் வாரத்திலேயே தனக்கு ஒரு சில குடும்ப பிரச்சனைகள் உள்ளதாக வெளிப்படையாகவே கூறி இருந்தார். அதே போல் தனக்கு கடன் உள்ளதையும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஏலசீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில், கவினின் அம்மா உட்பட மூன்று பேருக்கு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வழக்கில் கவினுக்கு சம்மந்தம் இல்லை என்றாலும் அவர் பிரபலம் என்பதில் அவரின் பெயர் அதிகமாகவே அடிபடுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கவின் ஆசிரியை தனது சமூக வலைத்தளத்தில் கவினுக்கு ஆறுதல் கூறி கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்... "தமிழ்நாட்டில் இருக்கும் நடுத்தர வர்க்கம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இது. கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் பெரிதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் கவின் ஏன் இல்லை என்றால் அவர் அப்போது மைனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். இன்று எத்தனை பேர் பெற்றவர்கள் கடனை அடைக்கின்றார்கள். ஆனால் கவின், தான் கடன் அடைக்க தான் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததாக ஈகோ இல்லாமல் கூறினார். உன்னை மாதிரி கடன் அடைக்க நான் உள்ளே இருப்பதாக ஈகோ இன்றி கூறினார். மது கூட 'உன்னை போல் கடன் அடைக்க பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று என்று கேவலப்படுத்திட்டார். 29 வயதில் கவின் எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டாலும்  எதையும் வெளிக்காட்டவில்லை. முகின், தர்ஷன் ஆகியோர் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றார். கவின்! நீ கவலைப்படாதே, என்னை போன்ற தாய்மார்களின் ஆதரவு என்றும் உனக்கு உண்டு. வென்று வா என்று அந்த ஆசிரியை பதிவு செய்துள்ளார். இவரின் இந்த உருக்கமான பதிவு, கண்ணீரை வரவைக்கும் உள்ளதகாக இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.