பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அனைவராலும் வெறுக்கப்பட்ட போட்டியாளராக இருந்த கவின், பின் தன்னுடைய நல்ல குணத்தால் சீக்கிரமாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.  நிகழ்ச்சியின் துவக்கத்தில் இவர் விளையாட்டாக செய்த சில விஷயங்கள் இவருக்கே வினையாக அமைந்தது.

நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய தவறை உணர்ந்த கவின், உண்மையான தன்னுடைய குணத்தை வெளிப்படுத்தினார். அதே போல் இவர் லாஸ்லியா மீது உள்ள காதலை மென்மையாக நிகழ்ச்சியில் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது.

கவின் தான் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்று கொண்டு வெளியேறுவதாக அறிவித்தார்.

வெளியே வந்த பின், கவினை திரைப்படங்களில் நடிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. கவினும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தயாராகிறார்.

இது ஒரு புறம் இருக்க, தற்போது கவின் தன்னுடைய சொந்த ஊரான திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது... அங்குள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு கொடுத்த அமோக வரவேற்பு பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பண பிரச்சனை ஒன்றின் நிமித்தமாக, வாங்கிய தொகையை மக்களுக்கு திருப்பி கொடுக்க முடியாமல், அவமானப்பட்டு தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வெளியேறிய கவின், அதே ஊரில்... ரசிகர்களின் ஆரவாரத்தோடு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார். 

அந்த வீடியோ இதோ...

"