பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விட்டதால், இந்த நிகழ்ச்சியின் மீதான விறுவிறுப்பு அதிகரிக்க வைக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் பல்வேறு யுக்தியை கடைபிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நேற்றைய தினம் கூட, இந்த கேம் என்ன என்பதை அறியாமல் உள்ளே இருப்பவர்கள் விளையாடி வருகிறார்கள். அதை நாம் தான் புரிய வைக்க வேண்டும். அந்த கடமை நமக்கு இருக்கிறது என கூறி  இருந்தார் கமல். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கவின் மற்றும் முகேன் ஆகியோரின் ஆசிரியர்களை பேச வைத்து, செண்டிமெண்ட் டச் ஏற்படுத்தி அவர்கள் இருவரையும் ஒருவழியாக அழ வைத்துவிட்டனர்.

போன் காலில் முதலாவதாக வரும் கவினின் ஆசிரியை, கலையுலக நாயகனாக வளர தன்னுடைய வாழ்த்துக்கள் என கூறுகிறார். பின் வாய்ப்பு கொடுக்க மறுத்தவர்கள் முன் நீ வாழ்ந்து காண்பித்தால் மட்டும் பத்தாது, வளர்ந்தும் காண்பிக்க வேண்டும் என கூறுகிறார். இவரின் வார்த்தைகளை கேட்டதும் கவின் கண்களில் இருந்து  தண்ணீர் தாரை தாரையாக ஊற்றுகிறது .

இதை தொடர்ந்து முகேன் ராவின் ஆசிரியை என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச துவங்குகிறார் அவரின் ஆசிரியை . எடுத்ததுமே வகுப்பிலே ஏதாவது தவறு செய்து விட்டால், அவரை தன்னிடம் தான் அவரின் வகுப்பு ஆசிரியை அனுப்புவார். பின் அவரிடம் பேசிய போது தான் தெரிந்தது அவருக்கு தேவைப்படுவது அன்பு என கூறுகிறார் . இந்த வார்த்தையை கேட்டதும் முகேன் தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கையின் விரல்களை கடித்து கொண்டு அழுகிறார். 

எனவே இன்றைய தினம், சென்டிமென்டுக்கு குறைவில்லாமல் செல்லும் என எதிர்பார்க்கபப்டுகிறது.